internet

img

மொபைல் போன் சிறப்புகளைப் படிக்கும்முன் தெரியவேண்டிய தகவல்கள்...

ஒரு ஸ்மார்ட்போன் வாங்க உங்களுக்கு விருப்பமென்றால் அதன் திரை (Display), ரேம் (RAM), உள் நினைவக அளவு (Internal Memory), பிராசசர், கேமரா பிக்சல் (Mega Pixel), இயங்குதளப் பதிப்பு (OS Version), பேட்டரி திறன், என்னென்ன சென்சார் வசதிகள் உள்ளன என்பது போன்ற சிறப்பம்சங்கள் அறிந்து கொண்டு, ஆராய்ந்து வாங்குவது வழக்கம்.போனின் சிறப்பம்சங்களாக குறிப்பிடும் பட்டியலில் காணப்படும் கொரில்லா கிளாஸ், சிநாப்டிராகன் பிராசசர், அமோலிட் டிஸ்பிளே, ஐபிஎஸ் டிஸ்பிளே, ஆக்டாகோர், ஹெக்சா கோர், டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் என்று கூறப்படுவதில் உள்ள நுணுக்கமான பின்புலத் தகவல்கள் என்ன, அதன் செயல்பாடு என்ன என்பதை அறிந்து கொண்டால் இன்னும் சிறப்பானதை தேர்வு செய்ய உங்களுக்கு உதவும்.

பிராசஸர்
கணினி, ஸ்மார்ட்போன் எதுவாக இருந்தாலும் அதில் இதயம் போன்ற செயல்பாட்டைக் கொண்டதுபிராசசர். செயலிகளின் செயல்பாடு, ஒய்ஃபீ, சிம்இணைப்பு, ஜிபிஎஸ், செயலிகள் என அனைத்துசெயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து அவற்றிற்குத்தேவையான மின்சார அளவையும், ஹார்ட்வேர்,செயலிகளுக்கு இடையில் தகவல் பரிமாற்றத்தையும்ஒருங்கிணைப்பையும் ஏற்படுத்தித் தருவதுதான் இதன் வேலை.இந்த வேலைகளைச் செய்வதற்கு ஒரு கை போதாது, பல கைகள் தேவை. அதுதான் கோர் என்றுஅழைக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் பலவிதமானசெயல்பாடுகளை கையாளும்போது ஸ்மார்ட்போன்மெதுவாக இயங்குவதைப் பார்த்திருப்பீர்கள். அதிகமான கோர்கள் கொண்ட பிராசசர் இருந்தால் விரைவாக இயங்கும். அதற்காகவே டூயல்-கோர், குவார்ட்-கோர், ஹெக்சா-கோர் மற்றும் ஆக்டா கோர் (எட்டு கோர்) எனப் புதிய புதிய மேம்படுத்தல்கள் வந்துகொண்டிருக்கின்றன. பட்ஜெட் போன்களில் ஆக்டோகோர்கள் எனப்படும் எட்டு கோர்கள் கொண்ட பிராசசர்கள் தற்போது கிடைக்கின்றன. கோர்களின் எண்ணிக்கையை கைகளைப் போல கற்பனை செய்து கொள்ளுங்கள். எட்டு கைகள் இருந்தால் அதனுடைய செயல்பாடு எட்டு மடங்கு அதிகப்படியான பணிகளை அதிவேகமாக செய்து முடிக்கும். இதனால்செயலிகள் வேகமாக செயல்படும், அதிக தரமுள்ளபுகைப்படம் அல்லது எச்.டி. தரத்தில் வீடியோக்களைபதிவு செய்யலாம். கேம்கள் விளையாடவும், இணையத்தைக் கையாள்வதும் எளிதாகும். ஸ்மார்ட்போன்வேகம் சிறப்பாக இருக்கும். கோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் உள்ள ஒரு பிரச்சனைபேட்டரித் திறனை அதிகமாக எடுத்துக்கொள்ளும் என்பதுடன், வெப்பமும் வெளியிடப்படலாம். அதற்கேற்ப போனில் பேட்டரி திறன் சிறப்பாக உள்ளதாஎன்பதைப் பார்த்து வாங்க வேண்டும்.
பொதுவாக நாம் வாங்கும் போன்களில் பெரும்பாலும் இரண்டு நிறுவன பிராசசர்கள் அதிகம் இடம்பிடிக்கின்றன. ஒன்று குவால்காம் என்ற அமெரிக்க நிறுவனம் மற்றொன்று மீடியா டெக் எனப்படும்தைவானைச் சேர்ந்த நிறுவனம். குவால்காம் நிறுவனம் ஸ்நாப்டிராகன் என்ற பெயரில் சந்தைப் படுத்துகிறது. இவற்றின் விலையைவிட மீடியா டெக்நிறுவனத்தின் பிராசசர் சற்று விலை குறைவு. அதனால்தான் பட்ஜெட் போன்களில் மீடியாடெக் பிராசசர்கள் அதிகம் இடம்பிடிக்கின்றன. மீடியாடெக் விலைகுறைவானது என்பதால் செயல்திறனும் குறைவாகவே இருக்கும் என்று எண்ண வேண்டியதில்லை. மிகச்சிறப்பாக இயங்குவதாக ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் கூறுகின்றன. இவை இரண்டு அல்லாமல் சாம்சங், ஆப்பிள், ஜியோமி போன்ற நிறுவனங்களும் தங்கள் தேவைக்காக பிராசசர்களைத் தயாரிக்கின்றன​.

கொரில்லா கிளாஸ்
மொபைல் போன் பயன்படுத்துபவர்கள் அதனைத் தவறி கீழே போடுவது வழக்கமான ஒன்றுதான். அச்சமயங்களில் திரையில் கீறலோ, சேதமோஏற்படாமல் பாதுகாப்பது திரையைப் பாதுகாக்கும்பிளாஸ்டிக் வகை கண்ணாடி தடுப்புதான். பெரும்பாலான போன்களில் திரையைப் பாதுகாக்கதரப்பட்டிருப்பது கார்னிங் (Corning) என்ற நிறுவனத் தயாரிப்பான கொரில்லா கிளாஸ் (GorillaGlass)தான். இரசாயனங்கள் கொண்டு தயாரிக்கப் படும் இந்தக் கண்ணாடிகள் கீறல் விழுதல், உடைதல்போன்ற தரக்கட்டுப்பாடுகளைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு முறையும் கூடுதல் திறனுடன் வெளியிடப்படுகின்றன. இதில் 3வது தலைமுறை பெரும்பாலா ஸ்மார்ட்போன்களில் இடம்பெற்றிருக்கிறது. தலைமுறை வரிசையில் கொரில்லா கிளாஸ் 6 சென்ற ஆண்டு வெளியானது.சாம்சங் கேலக்சி, ஒன்பிளஸ் போன்ற உயர் ரகபோன்களில் இந்தக் கண்ணாடி பயன்படுத்தப் பட்டுள்ளது.

ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்
மொபைல் போனைப் பாதுகாக்க பாஸ்வேர்ட்,பேட்டன் லாக், பின் நம்பர் போன்ற பாதுகாப்புகளைவிட நம்முடைய கைரேகையைக் கொண்டு பூட்டுவதுமேலும் பாதுகாப்பானது என்பதால் ஃபிங்கர்பிரிண்ட்சென்சார் (Fingerprint Sensor) போன்கள் சந்தைக்கு வந்தன. நம் விரல் ரேகையைக் கொண்டுபூட்டப்பட்ட போனை மற்றவர்கள் திறக்கமுடியாது.இதுவரை பின்பக்கமாக இருந்த சென்சார்கள் தற்போது புதிய வகை மொபைல்களில் முன்பக்கத்திரையின் அடிப்பகுதியில் (In-Display Fingerprintsensor) இணைக்கப்பட்டு விற்பனையாகின்றன. கைரேகை ஸ்கேனர் தொழில்நுட்பத்தில் மூன்று வகைகள் இருக்கின்றன.கேப்பாசிட்டிவ் (Capacitive Fingerprint Sensor): நாம் தற்போது பயன்படுத்தும் பெரும் பாலான மொபைல்களில் இந்த வசதிதான் இருக்கிறது. மொபைலின் பின்புறத்தில் ஒரு ஸ்கேனர் போல இருக்கும். இதன் மீது விரலைப் பதித்தால் அன்லாக் ஆகும். இது எப்படி செயல்படுகிறது என்றால் நமது விரல் ரேகையில் உள்ள மேடு, பள்ளங்கள், வளைவுகள், இணைப்புகளை உணர்ந்து மொபைலில் பதிவு செய்து கொள்கிறது.திறப்பதற்கு மீண்டும் விரலை ஸ்கேனர் மீது வைக்கும்போது நினைவில் இருக்கும் ரேகையுடன் ஒப்பிட்டுப் பார்த்து சரியாக இருந்தால் மொபைலை திறக்கிறது.ஆப்டிக்கல் (Optical Fingerprint Sensor) : இந்த வகை சென்சார்கள் மொபைலில் ஒரு பட்டன் போல் இருக்கும் அவற்றில் நமது கைரேகையை வைக்கும்போது லைட் எரியும், அப்போது நமதுகை விரலில் உள்ள பள்ளம் மற்றும் மேடுகளை 2D வடிவில் பதிந்து கொள்கிறது. இது இண்டிஸ்பிளே
எனப்படும் திரையில் கைரேகை சென்சார் இணைக்கப்பட்ட மொபைல்களில் அதிகம் தற்போதுபயன்படுத்தப்படுகிறது. இந்த வகையில் பூட்டப்பட்டமொபைலை தொழில்நுட்பம் அறிந்தவர்களால் கைரேகையை பிரதி எடுத்து வைத்து திறந்து விட முடியும் என்பது சமீபத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பது இந்த வகை 2D தொழில்நுட்பத்திற்குப் பின்னடைவாக உள்ளது.அல்ட்ராசானிக் (Ultrasonic Fingerprint Sensor) : இது முப்பரிமான முறையில் ரேகையை ஸ்கேன் செய்யும் தொழில்நுட்பமாகும். இதுவே தற்போதுள்ள வகைகளில் நம்பகத்தன்மை மிக்கதாக உள்ளது. புதிய மொபைல்களில் இந்தத் தொழில்நுட்பமே பயன்படுத்தப்படவுள்ளது.

தொடுதிரை
மொபைலில் காட்சிகளைத் துல்லியமாகவும் தெளிவாகவும் காட்ட இன்றைய தொழில்நுட்பம் பல்வேறு வன்பொருள்களையும் மென்பொருள் களையும் பயன்படுத்துகிறது. காட்சியை ஒளிரவிடும்திரையில் ஐபிஎஸ் (IPS Display) திரை என்பது பரவலாக பயன்படுத்தப்படுகிறது. விலை அதிகமான உயர்ரக மொபைல்களில் அமோலிட் (AMOLED Display) வகை திரைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது பட்ஜெட் போன்களிலும் இந்தத்திரை நுழையத் தொடங்கியுள்ளது.அமோலிட் டிஸ்பிளே வகை திரையில் காட்சியின்தரமும், துல்லியமும் அதிகமாக இருக்கும். ஐபிஎஸ்திரையில் நேராகப் பார்க்கும்போது இருக்கும் துல்லியம் மொபைலை பார்வைக்கு சாய்வாக இருக்கும்படியாக பார்த்தால் மங்கலாகக் காட்சியளிக்கும். அமோலிட் எந்தக் கோணத்தில் பார்த்தாலும் ஒன்று போலதெளிவாகக் காட்சியளிக்கும். ஒவ்வொரு பிக்ஸல் களும் தெளிவாக ஒளிரும்.ஐபிஎஸ் திரைகளை விட அமோலிட் திரைகள்மிகக் குறைவான மின் சக்தியையே பயன்படுத்தும்.ஐபிஎஸ் திரைகள் தெளிவின்மை, விலை குறைவுஎன்றாலும் அதிக காலத்திற்கு உழைக்கக்கூடியவை. அமோலிட் திரைகள் அந்த அளவிற்கு உழைப்பதில்லை. இருப்பினும் அதனையே அனைவரும் விரும்புகின்றனர்.

===என்.ராஜேந்திரன்===

;